கொங்குநாடும், குருகுலமன்னரும்
பூந்துறைநாடு, தென்கரைநாடு, காங்கேயநாடு, பொன்கலூர்நாடு, ஆறைநாடு, வாரக்கனாடு, பூவாணியநாடு, அரையநாடு, ஒடுவங்கநாடு, வடகரைநாடு, கிழக்குநாடு, நல்லுருக்கநாடு, வாழவந்திநாடு, அண்டநாடு, வெங்காரைநாடு, காவடிக்கனாடு, ஆனைமலைநாடு, இராசிபுரமணநாடு, தலையநாடு, தட்டையநாடு ஆகிய 24 நாடுகளைக்கொண்ட கொங்குமண்டலத்தைக் குருகுல மன்னர்கள் குறிப்பு நாட்டெல்லையிலிருந்து செங்கோற் செலுத்தி வந்தார்கள். இவர்கள் வசித்து வந்த கோட்டையின் சின்னங்கள் திங்களூரில் (குறிப்புநாடு) இன்றும் காணப்படுகின்றன. மற்றும் வெட்டுவன் சகோதரர்கள் ஆங்காங்கு கொங்கு நாடெங்கும் பரவி வாழ்ந்திருக்கிறார்கள். இதற்குப் பல சான்றுகளும், ஆதாரங்களும், கல்வெட்டுகளும், சிலாசாசனங்களும் உள.
செய்யான் பல்லவராயன்
தொல்லுல கத்தினிற் றுட்டரை வெட்டித் துணித்ததனாற்
சொல்லிய போசள வீர புசபலன் றுகளுறுசீர்ப்
பல்லவ ராய னெனப்பட்ட மீயப் படைசெலுத்த
வல்லவன் வேட்டுவச் செய்யானும் வாழ் கொங்கு மண்டலமே!
(கொங்குமண்டல சதகம்)
வரலாறு
மேல்கரைப் பூந்துறை நாட்டைச் சார்ந்த அரச்சலூரிலிருந்து அரசுரிமை நடாத்திய வெட்டுவகுலத்துச் செய்யான் பல்லவராயன் என்பவர் ஓய்சல வீரவல்லாள வேந்தனுக்கு எதிரிகளான் இன்ன லேற்பட்டகாலத்து, படைகளுடன் சென்று எதிரிகளைத் தோர்க்கடித்து, ஜெயம்பெற்றுவந்தான். இவனது யுத்த தந்திரத்தையும், உதவுமெண்ணத்தையும் மெச்சி `பல்லவராயன்' என்ற பட்டப்பெயரிந்து கொண்டாடினர். இவனது சாசனம் அறச்சலூர் புற்றிடங்கொண்ட நாயினார் ஆலயத்தின் தென்புறச் சுவற்றில் வரையப்பட்டுள்ளது. (இதுவின்றி வெட்டுவர்களைச்சார்ந்த சில சாசனங்கள் ஆங்குள்ள பிரபலஸ்தர்களால் மண்ணிற்புதைத்து மறைத்துவிடப்பட்டதாகவும், இன்னும் சில இடங்களில் சாசனக்கற்களை உடைத்தெரிந்திருப்ப தாகவும் கேள்வி. இதற்குக்காரணம் வெட்டுவகுலத்தினர்பால் கொண்டுள்ள விரோத மனப்பான்மையே) இவன்மீது சில நூற்கள் கூறப்பட்டுள்ளன. ஆகவே! வெட்டுவ மன்னர்கள் பூந்துறை நாட்டையும், அரசாண்டுள்ளனரென்பதற்கு இதுவுமோர் அத்தாட்சியாகும்.
அல்லாளன் இளையான்
வடமுக நின்று வருகா விரியின் வனத்தையென்றுந்
திடமுறு கொங்கினும் பாசன மாகச் செலப்பிரித்த
அடல்கொ ளல்லாள னிளையான் பெருக்க மமைந்துவளர்
வடகடை யாற்றூர் திகழ்வது வுங்கொங்கு மண்டலமே!
(கொங்குமண்டல சதகம்)
வரலாறு
கொங்கு இருபத்து நான்கு நாட்டினுள்ளே கீழ்கரை அனாய நாட்டில் வடகரை ஆற்றூரில் வெட்டுவரில் இம்முடித்திருமலை அல்லாள இளையாநாயக்கன் யெனத் தக்கோனொருவனிருந்தான். அவன் திருச்செங்கோடு ஸ்ரீ நாகேஸ்வரர் அர்த்தமண்டபம், மகாமண்டபம் முதலிய திருப்பணிகள் செய்தான். மைசூர் பெருங்கலகக்காரனும், கொள்ளைக்காரனுமான நஞ்சையவுடையார், ஸ்ரீ அர்த்தநாரீஸ்வரர் ஆலயத்திற் கொள்ளையடித்துக்கொண்டு போனார். என்றாலும், ஆறை இளையாநாயக்கன் பலத்தசேனையுடன் சென்று அவர்களை வழிமறித்துக் கொள்ளைப்பொருள்களைப் பிடுங்கிக்கொண்டு வந்து சேர்ந்தான். அழிந்தவற்றிற்குத் தன்னுடையதாகப் பல உதவினான். சாலிவாகன சகாப்த்தம் 1565 தாரண ஐப்பசி 25உ (கி.பி.1643) நாகேசுரர் கோவிலில் சம்புரோக்ஷணஞ் செய்வித்திருக்கிறான். காவிரியின் வடபுறம் அணையிலிருந்து வாய்க்கால் பிரித்துப் பாசனவசதி செய்வித்திருக்கிறான். இன்றும் இவ்வாய்க்காலை ராஜவாய்க்காலென வழங்கிவருகிறார்கள். இவனது முன்னோன் இம்முடிப்பட்டம் தியாகப்பெருமாள் நாயக்கனென்று காஞ்சிபுரம் செப்பேட்டி லெழுதப்பட்டுள்ளது. ஆகவே, வெட்டுவர்களுக்கு நாயக்கர் யென்ற பட்டப்பெயரும், ஆறைநாட்டு ஆட்சியும் இருந்ததென்பதை இதனாலறியலாம்.
கோபண மன்றாடி
தென்பாண்டி நாட்டினிற் சிங்களர் தீமை செயச்செழியன்
முன்போ யகற்ற வலியற்ற காலத்தின் மொய்ம்பொடவர்
பின்போடத் தானை கொடுமோட்டு வீரன் பெருங்களந்தை
மன்பூ வலனெனுங் கோபண னுங்கொங்கு மண்டலமே!
(கொங்குமண்டல சதகம்)
வரலாறு
பாண்டிய மண்டலத்தின் ஆளுகையைப்பற்றிப் பராக்கிரம பாண்டியனுக்குங் குலசேகா பாண்டியனுக்குஞ் சண்டை நேர்ந்தது. மனைவி மக்களுடன் பராக்கிரமபாண்டியனைக் குலசேகரன் நாசஞ்செய்யவும், இதனைக்கேள்வியுற்ற சிங்களத்தரசனான பராக்கிரம பாகு-தன் தண்டநாயகனான இலங்காபுரி யென்பானைப் பலத்தசைனியத்துடனனுப்பினாள
மகுடாபிஷேகம்
கலியுகம் 4175 ஆங்கிரஸ ஆடி எட்டாம் தேதி சுக்கிரவாரம் தசமி திதி, அவிட்ட நக்ஷ்த்திரமும் சேர்ந்த சுபநாளில் குருகுல மன்னர்கள் ஐவருக்கும் `ராயர்' என்ற பட்டம் வழங்கி கொங்கு இருப்பத்துநாலு நாடுகளையும் பாரம்பரியமாய் “ஆண்டு கொள்க” வெனச் செப்பேடு பட்டயமு மெழுதிக் கருவூர் சுவாமியின் முன்னதாக வெட்டுவராஜேந்திரனுக்கு முடிசூட்டினர். மற்றுள்ள நால்வருக்கும் இளவரசுப்பட்டமும் ஈந்தனர். அன்றுமுதற் கொங்குமண்டலத்தை இராஜநீதி சிறிதும் வழுவாது அரசாண்டு குடிகளிடம் கொஞ்சங் கடமைபெற்று, எதிரிகளின் பயமின்றி இன்புற்றிருந்தனர். இப்பட்டாபிஷேக நிகழ்ச்சியைக் காஞ்சிபுரம் செப்பேடு கூறுகிறது.